இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சாம்கரன் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சாம்கரன் விலகல்

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் சாம்கரன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக அவர், தனியாக இந்தியாவிற்கு வருவதற்கான சிக்கல் உள்ளதால் இந்த தொடரில் இருந்து சாம்கரன் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்று டெஸ்ட் தொடருக்கு பின்னர் இடம்பெறும் இருபது இருபது போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.