
லங்கா சதொசவின் 75 கிளைகளில் சலுகை விலையில் காய்கறி விற்பனை!
மேல் மாகாணத்திலுள்ள 75 லங்கா சதொச வர்த்தக நிலையங்களில் சலுகை விலையில் காய்கறிகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள 26 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 41 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 8 இடங்களிலும் இவ்வாறு சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலையில் விற்கப்படும் கெரட், லீக்ஸ், வட்டக்காய், கத்திாிக்காய், பச்சை மிளகாய் மற்றும் கோவா போன்ற காய்கறிகளை இவ்விடங்களில் சலுகை விலைகளில் பெறமுடியும் என நிதியமைச்சு தொிவித்துள்ளது.
இதேவேளை. உருளைக்கிழங்கை குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உருளைக்கிழங்குகளுக்காக நியாயமான விலையொன்றை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளது