
இலங்கை காவல்துறையில் முதலாவது கொவிட் மரணம் பதிவு..!
இலங்கை காவல்துறையில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மொனராகலை காவல்துறை பிரிவில் பிரதி காவல்துறை அதிகாரியாகக் கடமையாற்றிய 59 வயது நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
3ம் திகதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
அதன் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான குறித்த காவல்துறை அதிகாரி ஓய்வு பெறும் நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், அவரது இறுதி சடங்குகள் சுகாதார சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது