கொழும்பு காலி முகத்திடலில் கட்டப்படும் வீதியோர சிறு வர்த்தக நிலையங்களை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி..! (படங்கள் இணைப்பு)

கொழும்பு காலி முகத்திடலில் கட்டப்படும் வீதியோர சிறு வர்த்தக நிலையங்களை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி..! (படங்கள் இணைப்பு)

கொழும்பு காலி முகத்திடலின் பசுமையான நிலப்பரப்பில் கட்டப்படும் வீதியோர சிறு வர்த்தக நிலையங்களை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிடச் சென்றுள்ளார்.

காலி முகத்திடலின் பசுமையான நிலப்பரப்பினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் மற்றுமோர் நடவடிக்கையாக இந்த வர்த்தக நிலையங்கள் நிறுவப்படுகின்றன.

கடற்படையின் புதிய திட்டத்தின் படி இந்தச் சிறு வர்த்தக நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காலி முகத்திடலின் அழகை ரசிக்கும் வகையில் சிறு வர்த்தக நிலையங்களைக் கட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.