
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்
சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக்கூடும்.
இது தொடர்பில், கடற் தொழிலாளர்களும். கடல் பயணிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.