
நாட்டில் மேலும் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு...!
நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 245 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதுதவிர கம்பஹா மாவட்டத்தில் 214 பேருக்கும், இரத்தினப்புரியில் 53 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 260 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 63,352 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 61,987 பேர் குணமடைந்துள்ளனர்
இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 69,347 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 63,400 பேர் குணமடைந்துள்ளனர்.