தனியார் பேருந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பினை பிற்போடுவதற்கு தீர்மானம்...!

தனியார் பேருந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பினை பிற்போடுவதற்கு தீர்மானம்...!

தமது சேவை புறக்கணிப்பு நடவடிக்கையினை ஒரு வாரத்திற்கு பிற்போடுவதற்கு தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் இல்லத்தில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.