நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டம்...!

நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டம்...!

உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கிற்கு அமைய, அதிகாரிகள் தங்களின் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என, விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் வெங்காயத் தேவையில், நூற்றுக்கு 22 சதவீதமானவை உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், எஞ்சியவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதற்காக வருடாந்தம் 12 முதல் 15 பில்லியன் அளவான பணம் செலவு செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த ஆண்டு வெங்காய உற்பத்தியை நூற்றுக்கு 35 சதவீதமாகவும், 2023ஆம் ஆண்டில் 60 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.