EPF பங்களிப்புகக்கான குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைக்க அரசு தீர்மானம்

EPF பங்களிப்புகக்கான குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைக்க அரசு தீர்மானம்

ஊழியர்சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த வயதெல்லையை 14 முதல் 16 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தற்போதுவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றதொழில் அமைச்சின் ஆலோசனைகுழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது