திருமண நிகழ்வுக்கு சென்றவர்கள் உட்பட மணமகனுக்கும் ஏற்பட்ட சோகம்

திருமண நிகழ்வுக்கு சென்றவர்கள் உட்பட மணமகனுக்கும் ஏற்பட்ட சோகம்

மொரவக்க, பிட்டபத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மணமகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பிட்டபெத்தர பிரதேசத்தில் திருமண மண்டபம் ஒன்றில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவங்களில் கலந்து கொண்ட தரப்பினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.