கொரோனா தொற்றை அடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் சபாநாயகர்

கொரோனா தொற்றை அடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் சபாநாயகர்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார ஐ டி எச் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.