நாட்டில் மேலும் கொவிட் மரணங்கள் பதிவு..!
நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணொருவரும், வக்வெல்ல பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும் வெலிமட பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் பமுனுகம பகுதியை சேர்ந்த 75 வயதான ஆணொருவரும் தும்மலசூரிய பகுதியை சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் மரணித்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது