தனியார் பேருந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை..!

தனியார் பேருந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான கலந்துரையாடல் நாளை..!

தனியார் பேருந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் தாம் கொழும்புக்கு வெளியில் உள்ளமையால் நாளைய தினம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்ததாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கான தவணை கட்டணத்திற்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கனிப்பல் ஈடுபடுவதற்கு தனியார் பேருந்து சங்கம் முன்னர் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய சகல நிவாரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

அத்துடன் பேருந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான மாற்றீடுகளை அரசாங்கம் தயார்ப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.