
தேயிலை பறிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்பு..!
பசறை - யூரி - மாப்பாகலை பிரிவில் தேயிலை பறிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாப்பாகலை பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
கொழுந்து பறிப்பதற்காக நேற்றைய தினம் அவர் சென்றிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மரணித்தமைக்கான காரணம் தெளிவாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்