நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களின் ஒளிப்படங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும்..!

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களின் ஒளிப்படங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும்..!

குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களின் ஒளிப்படங்கள், ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

'மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கம் மற்றும் அச்சமற்ற சமூகம்' எனும் தொனிப்பொருளின் கீழ் பொது மக்கள் பாதுகாப்பு குழுவை நிருவுவதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

மஹரகம இளைஞர் அரங்கில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார்.

உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் குற்றங்களை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு முறைக்கேடுகளை தடுக்கும் நோக்கிலும் அறிமுகப்படுத்தப்படும் இந்த சமூக காவல்துறை முறைமைக்கு பொது மக்கள் பாதுகாப்பு குழு என பெயரிடப்பட்டுள்ளது.

இதனூடாக காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது