நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகமானோர் பதுளையில் பதிவு..!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகமானோர் பதுளையில் பதிவு..!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 726 கொவிட்-19 நோயாளர்களுள், அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் 197 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 116 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 101 பேரும், ஏனைய 312 நோயாளர்கள், நாட்டின் ஏனைய பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய நாளில், 14 ஆயிரத்து 749 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், முப்படையினரால் முன்னெடுக்கப்படும் 87 தனிமைப்படுத்தல் மையங்களில், 8 ஆயிரத்து 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது