மலையேறுவதற்கு சென்று காணாமல் போன இளைஞன்..! படங்கள் இணைப்பு

மலையேறுவதற்கு சென்று காணாமல் போன இளைஞன்..! படங்கள் இணைப்பு

மாத்தறை-நாவுல பகுதியில் மலையேறுவதற்கு சென்று காணாமல் போன நபரை காவற்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 04ஆம் திகதி மலையேறுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

மாத்தளை-நாவுல-அரங்கல பகுதியில் உள்ள மலையொன்றிற்கே குறித்த இளைஞன் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மலையேறுவதற்காக சென்ற தனது மகனை 04 நாட்களாக காணவில்லை என காவல்துறையில் குறித்த இளைஞனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இவரின் பெற்றோர் வழங்கிய புகாருக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையை அடுத்து குறித்த இளைஞர் மீட்கப்பட்டார் என கூறப்படுகின்றது.

சம்பவத்துடன், தொடர்புடையவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த இளைஞன் மலையேறும் பொழுது வீதி மாறி சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.