
பொது மக்கள் காவல்துறை முறைமையை அறிமுகப்படுத்த திட்டம்..!
உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் பொது மக்கள் காவல்துறை முறைமையை இலங்கையிலும் புதிய நடைமுறைகளின் கீழ் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்புக் குழு என பெயரிடப்பட்ட ஒரு குழுவின் செயற்பாடுகள் மூலம் மக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.