இலங்கையில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்!!!

இலங்கையில் 160,148 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் இன்றைய தினம் வரை 160,148 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் 3838 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது