
திருமண வைபவமொன்றில் மணமகன் உட்பட 33 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
சுகாதார துறைகளுக்கு அறிவிக்காமல் மாத்தறை பிரதேசத்தில் நடத்தப்பட்ட திருமண வைபவமொன்றிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளின் போது மணமகன் உட்பட 33 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, திருமணத்தில் கலந்து கொண்ட 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அம்பலங்கொடை பி.எஸ் குலரத்ன மத்திய கல்லூரியின் 5 ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் 15 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனின் தாய்க்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதால் அவருக்கும் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பி சி ஆர் பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை குறித்த மாணவனை வீட்டில் வைத்திருக்காது தாய் பாடசாலைக்கு அனுப்பியுள்ளார்