உள்நாட்டில் பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்..!!

உள்நாட்டில் பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்..!!

நாட்டின் மொத்த தேவையில் 22 சதவீத பெரிய வெங்காயம் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய துறை அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால், நாட்டின் தேவைக்கான ஏனைய பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதாகவும் இதற்கு 12 முதல் 15 பில்லியன் வரையில் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய பெரிய வெங்காய உற்பத்தியை 35 வீதமாக உயர்த்த வேண்டும் என விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.