
நாடு திரும்பிய இலங்கையர்கள்..!
வெளிநாடுகளில் தங்கியிருந்த 164 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு பிரவேசித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் சீசெல்ஸ்லில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்றிரவு நாட்டை வந்தடைந்தததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
குழுக்களாக வெளிநாட்டில் தங்கியிருப்போரை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள், இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்