உடன் அமுலாகும் வகையில் இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து

உடன் அமுலாகும் வகையில் இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தனியார் பேருந்து நடத்துனர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.