
ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் 90ஆவது இடத்திற்கு வந்த இலங்கை!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவே தொடர்ந்து முதலில் உள்ளது.
அமெரிக்காவில் 2 கோடியே 72 லட்சத்து 73 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 988 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1 லட்சத்து 54 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று முதலில் ஏற்பட்ட நாடான சீனா, இந்த பட்டியலில் இன்று 83வது இடத்தில் உள்ளது.
அந்த வகையில் இலங்கை இன்று 90வது இடத்தில் உள்ளது
இலங்கையில் கொவிட் தொற்றினால் 67 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையில் 7 நாடுகள் வித்தியாசம் மாத்திரமே காணப்படுகின்றன.
குறிப்பாக இலங்கையில் கொவிட் தொற்றின் 2வது அலை ஏற்படுவதற்கு முன்னர் 143வது இடத்தில் இலங்கை இருந்தது.
கொவிட் தொற்றின் 2வது அலை தாக்கத்தின் பின்னரே, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 90வது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.