கைக்குண்டை காவிக்கொண்டு வருகை தந்த நாய்..! காணொளி உள்ளே

கைக்குண்டை காவிக்கொண்டு வருகை தந்த நாய்..! காணொளி உள்ளே

மாத்தறை - கெக்கணந்துர எரிபொருள் நிலையத்திற்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் காவல் துறையினரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு நாய் ஒன்றினால் குறித்த கைக்குண்டு காவிக்கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் குறித்த காட்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்