கஞ்சா செடி பயிர்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது..!
கொஸ்லாந்தை பகுதியில் புத்தல காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கஞ்சா பயிரிடப்பட்டிருந்த இரண்டு இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு 11 அடி உயரம் கொண்ட கஞ்சா செடிகள் நடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுகின்றது.
குறித்த கஞ்சா செடிகளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபாய் அளவில் காணப்படும் என காவற்துறையினர் குறிப்பிடுகின்றனர்