வேதன அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள ஆசிரியர்கள்..!

வேதன அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள ஆசிரியர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது நாளாந்த தொழில் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் ஹட்டன், பொகலவந்தலாவ, நோர்வுட், மஸ்கெலியா, கொட்டகலை தலவாக்கலை மற்றும் கண்டி உள்ளிட்ட மலையத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது இதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அகிம்சை வழி போராட்டத்திலும் பெந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.