கற்பாறை சரிந்ததில் பலியான 04 வயது குழந்தை..!!

கற்பாறை சரிந்ததில் பலியான 04 வயது குழந்தை..!!

பண்டாரவளை-ஹல்தமுல்லை பகுதியில் கற்பாறை ஒன்று சரிந்ததில் 04 வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வெலிமடை பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் பெற்றோர்கள் ஹல்தமுல்லை பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்