அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி...!

அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி...!

28 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 28 வகையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக இந்த நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன் இந்தத் திட்டம் வணிக அமைச்சின் முழுமையான கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.

3 மாதங்கள் அமுலாக்கப்படும் இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள், நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்று வணிக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது