
தங்க நகைகளை கொள்ளையிட்ட இளைஞன் கைது...!
வீட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2,697,500 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புகாரொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தொிவித்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட வெவ்வேறு நிறைகளிலான 5 சங்கிலிகள், 7 வளையல்கள், 3 மோதிரங்கள் உட்பட தங்க நகைகள் சில காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன