தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி...!

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி...!

73வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தொிவித்துள்ளார்.

இந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்து தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக ஐக்கிய அமொிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தோற்கடிக்கவும், உலகப் பொருளாதார நிலையை வழமைக்கு கொண்டு வருதற்கும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அயராது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது