ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா..!

ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா..!

ரிதிமாலியந்த- கெமுனுபுர பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த ஆடைத் தொழிற்சாலை சுமார் இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ஆடை தொழிற்சாலையின் 2300 ஊழியர்களில் 540 பேர்க்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.