
மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை வன ஜீவராசிகள் அதிகாாிகளால் பிடிக்கப்பட்டது...!
புத்தளம் செல்லன்கந்த வனப்பகுதியில் நடமாடி, பல கிராமங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒற்றைக்கண் தட்பரயா எனப்படும் காட்டு யானை, நேற்றைய தினம் ஹொரவ்பொத்தானை யானைகள் பாதுகாப்பு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் துறையினரும், பிரதேசவாசிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அந்த காட்டு யானையின் இடதுகண் பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக, ஒற்றைக் கண் யானை என பிரதேசவாசிகள் அந்த யானைக்கு பெயரிட்டுள்ளனர்.
செல்லன்கந்த வனப்பகுதிக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக அந்த காட்டு யானை சேதம் விளைவித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யானை பிடிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் துறையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது