
உயிரிழந்த மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு சரீர பிணை..!
வளவை கங்கையில் 16 வயது மாணவி ஒருவர் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்தொட்ட பாடசாலையின் ஆசிரியை, ஒரு இலட்சம் ரூபாவிலான இரண்டு சரீர பிணைகள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை இன்று(01) பலாங்கொடை நீதவான் ஜயருவன் திஸாநாயக்கவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாடசாலையின் அதிபர் மற்றும் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி 15 மாணவர்களை நேற்று முன்தினம் வளவை கங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இதனாலேயே அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்திருந்தார்