
பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை பிற்போடப்பட்டது..!
கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளுக்கமைய பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் பேராசரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்க பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.