
கிழக்கு முனையம் 100% இலங்கை துறைமுக அதிகாரசபைக்கே - பிரதமர் உறுதி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 100% இலங்கை துறைமுக அதிகார சபையினால் இயக்கப்படும் நிறுவனமாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் சமர்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்துடன் இன்று முற்பகல் நடத்திய பேச்சுவார்தையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்றைய தினம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை நாளை முதல் கைவிட பிரதமருடனான சந்திப்பின் போது தொழிற்சங்க ஒன்றியம் இணக்கப்பாட்டை வெளியிட்டதாக பிரதமர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.