கடந்த 24 மணித்தியாலங்களில் 406 பயணிகள் இலங்கை வருகை..!

கடந்த 24 மணித்தியாலங்களில் 406 பயணிகள் இலங்கை வருகை..!

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 406 பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 182 பயணிகளும், ஜப்பானில் இருந்து 53 பயணிகளும் அவர்களில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 10 விமானங்கள் ஊடாக 777 பயணிகள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களில் 248 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.