மார்ச் 31ஆம் திகதியிலிருந்து ஏற்படப்போகும் மாற்றம்! வெளியானது வர்த்தமானி

மார்ச் 31ஆம் திகதியிலிருந்து ஏற்படப்போகும் மாற்றம்! வெளியானது வர்த்தமானி

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை மார்ச் 31 முதல் தடை செய்யும் வகையில் இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ளார்.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து இந்த தீர்மானத்தை செயற்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியாகி உள்ளது.

அதன்படி, எந்தவொரு செயல்முறை, வர்த்தகம் அல்லது தொழில்துறையிலும் பொலித்தீனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து பை உள்ளிட்டவற்றுக்கு 20 கிராமுக்கு சமமான அல்லது குறைவான நிகர எடையுள்ள பெக்கற்றுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.