கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாரஹென்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் ஆரம்பம்

கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாரஹென்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசியான கொவிஷீல்ட்டை 829 காவல்துறை உறுப்பினர்களுக்கு செலுத்தும் நடவடிக்கை இன்று நாரஹெண்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளது.

காவல்துறை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள முதன்மை பட்டியலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகளுக்கு தடுப்பூசியினை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுயதனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மீறி செயற்படுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சிவில் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்தி இன்று முதல் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில் 19 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையான லதாகரன் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்