
தென்னிலங்கையில் நிகழ்ந்த கோர விபத்து! தம்பதியினர் உயிரிழப்பு
எல்பிடிய, அவித்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து முன்னால் பயணித்த மோட்டார் சைக்கில்க மீது மோதியுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கில் முன்னொல் சென்ற மோட்டார் சைக்கிலுடன் மோதி இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
50 வயது ஆண் ஒருவரும் 47 வயதுடைய அவரது மனைவி ஆகியோரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.