
புறாக்களை திருட முயன்ற இளைஞர்கள் இருவர் கைது..!
காலி பிரதேசத்தில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக நுழைந்து அங்கிருந்த புறாக்களை திருட முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13 மற்றும் 18 வயதானவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் இருவரும் இணைந்து 41000 ரூபா பெறுமதியான 4 புறாக்களை திருட முயற்சித்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் யாரோ ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, காவல்துறை அதிகாரிகள் வர்த்தக நிலையத்தின் பின்புற கதவை உடைத்து புறாக்களை திருட முயன்ற சந்தேக நபர்களை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.