
வேகக்கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்து! சம்பவ இடத்திலேயே மூவர் பலி
கொழும்பு - மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.
வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 48, 49 மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்