கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள்! தொடர்ந்தும் பாதிக்கப்படும் கிண்ணியா விவசாயிகள்

கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள்! தொடர்ந்தும் பாதிக்கப்படும் கிண்ணியா விவசாயிகள்

கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிண்ணியா புளியடிக் குடா, பக்கிரான் வெட்ட மற்றும் வன்னியனார் மடு பகுதிகளிலுள்ள விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நீர் இல்லாதபோது குறித்த ஆறுகளை குறுக்காக கட்டுவதும் மழை, வெள்ளம் வருகின்ற போது அவற்றைக் கழற்றுவதும் அடிக்கடி இப்பகுதியில் நடைபெறுகின்றது.

இந்த நிலைமை விவசாயிகளுக்கு உயிர் அச்சுறுத்தலையும் கூட சில நேரம் ஏற்படுத்துகின்றது. தற்போதும் கூட 10 அடி உயரத்திற்கு மேற்பட்ட நீரில் இவ்வாறு விவசாயிகள் கஷ்டப்படுவது இப்பிரதேசத்தில் மாத்திரமே காணப்படுகின்றது.

நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் ரெகுலேட்டர் பொறிமுறை இன்னும் செய்து தரப்படாமை மிகவும் வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றார்கள்.

இன்னிலை தொடர்ந்தும் இடம்பெற கூடாது . இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களிலும் ரெகுலேட்டர் பொறிமுறைமை அமைத்துத் தருமாறு சம்மந்தப்பட் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுகின்றார்கள்.