நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்தது!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் 848 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 293 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 844 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
6 ஆயிரத்து 703 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 879 பேர் குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.