
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய உறுப்பினர்களை உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மையில் கட்சிக்கு புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படவுள்ள அதேநேரம், கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்காக நாடு முழுவதும் கட்சியின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பொதுமக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக குழுவினரை சந்திப்பதற்காக, கட்சியினால் இரண்டு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி வாராந்தம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொதுமக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகக்குழு உறுப்பினர்களை சந்திக்க முடியும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்