
இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பூமியதிர்ச்சி
இலங்கையில் இன்று காலை வேளையில் மிதமான பூமியதிர்ச்சி ஒன்று பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் உள்ள வலப்பன பகுதியிலேயே இவ்வாறு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவில் 2.0 அளவைக் கொண்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது