இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வெளியானது

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வெளியானது

இன்றை நாளில் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய நாளில் 5,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய, இலங்கையில் இரண்டு நாட்களில் 37,825 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.