நாட்டின் பல்வேறு பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள்

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள்

கொவிட்-19 தடுப்பூசிகள் விநியோகப் பணிகளுக்கு மத்தியில், தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தயார்ப்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நன்கொடைகளை எதிர்பார்க்க முடியாது.

எனவே, இயன்றளவு விரைவில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு நேற்றைய தினம் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைவான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்கான நிதி ஏற்பாடுகளும் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தொற்று நோயியல் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது