தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை..!

தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை..!

துறைமுக தொழிற்சங்கங்கள், நேற்று முதல் ஆரம்பித்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக அதிகார சபையின் முழுமையான முகாமைத்துவத்தின் கீழ் கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று மதியம் துறைமுகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர், அவர்கள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன