
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட 1223 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 10ஆம் திகதி முதல் 9445 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 1223 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.